லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனதாபுர பிரதேசத்தில் கும்புக்கன் ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நேற்று (19) பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளார்.
லுணுகலை, ஜனதபுர பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாக பெண்ணின் கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான கணவருக்கு எதிராக மனைவி பாதுகாப்பு உத்தரவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், பெண்ணின் சடலம் பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரின் கணவரைக் கண்டுபிடிக்க லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.