Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உலகம்ஈரான் ஜனாதிபதி மரணம்

ஈரான் ஜனாதிபதி மரணம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும் நேற்று (19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகொப்டரே விபத்துக்குள்ளானது.

குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles