ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்நிலையில், அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் அரச தொலைக்காட்சியிடம், நிலைமை ‘நன்றாக இல்லை’ என்று கூறினார்.
விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் பகுதியில் ஈரான் இராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.