ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (20) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை கேள்வியுற்று இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் சந்தித்து இரங்கலை தெரிவித்ததோடு, இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றையும் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில்,
ஹெலிக்கொப்டர் கோர விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் சென்ற பல மூத்த அதிகாரிகள் உயிரிழந்தமை ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ரைசி இலங்கையின் உண்மையான நண்பராக இருந்தார். ஈரான் மக்கள் மீது அவர் கொண்ட தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.