யாழ்ப்பாணம் – மாதகல் புளியந்தரை கடற்கரையில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.
படகு பழுதா அல்லது என்ன நோக்கத்திற்காக மூவரும் கரையொதுங்கினார்கள் என்பதை விசாரணை செய்வதற்காக மூவரையும் இளவாலைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.