முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (16) சட்டமா அதிபரை சந்தித்து கலந்துரையாடி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது.