Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உலகம்ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

ஸ்லோவாக்கியாவின் – ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார மாளிகைக்கு வெளியே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் முக்கிய தேர்தலாக கருதப்படும் ஸ்லோவாக்கியாவின் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles