Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போயிருந்த இரு மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு

காணாமல் போயிருந்த இரு மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு

கினிகத்தேன பிரதேசத்தில் சாதாரணத் தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று (15) இரவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகக் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவிகள் இருவரும் கடந்த 14 ஆம் திகதியன்று சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகக் கினிகத்தேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் இருவரும் பரீட்சைக்குத் தோற்றாமல் காணாமல் போயிருந்துள்ளனர்.

இதனையடுத்து இரு மாணவிகளின் உறவினர்களும் இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகள் இருவரும் வேலை வாய்ப்புத் தேடி கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ள நிலையில் இருவரும் கடுவலை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles