Tuesday, August 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் வைத்தியசாலையில்

பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் வைத்தியசாலையில்

இரத்தினபுரி, புலுதொட்ட, பல்லபெந்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று மாலை தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்ததால் மோட்டார் சைக்களின் பின்னால் பயணித்த நபர் குடையை விரித்துள்ளார், இதனால் சாரதிக்கு வீதி சரியாக விளங்காமல் பேருந்துடன் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles