Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரசவித்த குழந்தையை விட்டு சென்ற சிறுமி சிக்கினார்

பிரசவித்த குழந்தையை விட்டு சென்ற சிறுமி சிக்கினார்

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர், குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது சிறுமியின் தாயாரும் அவரது உதவிக்கு நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து, இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும், அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles