Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்ற சிறப்புரிமையை தவறாக பயன்படுத்துவதாக தயாசிறி மீது குற்றச்சாட்டு

பாராளுமன்ற சிறப்புரிமையை தவறாக பயன்படுத்துவதாக தயாசிறி மீது குற்றச்சாட்டு

இலங்கை ஆயுதப்படையின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியமைக்கும் Avant Guard கடல்சார் சேவைக்கும் (தனியார்) தொடர்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷ்ஷங்க சேனாதிபதி கையொப்பமிட்ட விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், Avant Guard Maritime Service (தனியார்) நிறுவனத்திற்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Avant Guard நிறுவனம் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருப்பின் அல்லது அந்த நிறுவனத்தில் யாரேனும் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருந்தால், அவற்றை பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் முன்வைத்து நிரூபிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத பட்சத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பி தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles