சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம்(Lawrence Wong) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திர நாடாக உருவாகியதிலிருந்து 3 பிரதமர்கள் மாத்திரமே அங்கு ஆட்சி செய்துள்ளனர்.
நாட்டின் முதலாவது பிரதமரும் நவீன சிங்கப்பூரின் ஸ்தாபகர் என அழைக்கப்படுபவருமான Lee Kuan Yew, 25 ஆண்டுகள் பதவி வகித்திருந்தார்.
Lee Kuan Yew-இன் மகனே தற்போது பதவியை இராஜினாமா செய்துள்ள Lee Hsien Loong ஆவார்.
இவரது பதவி விலகலுடன் சிங்கப்பூரில் லீ குடும்பத்தின் அரசியல் சகாப்தம் நிறைவிற்கு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.