இந்த ஆண்டு 20 வழிபாட்டுத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இவ்வருடம் ஒன்பது வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை உத்தகந்தர ரஜமஹா விகாரை, குருநாகல் தம்பதெனிய ரஜமஹா விகாரை, மொனராகலை புகாரா ரஜமஹா விகாரை, புத்தளம் வெஹெரகல ரஜமஹா விகாரை, நுவரெலியா பம்பரகெலே ரஜமஹா விகாரை, கொழும்பு படபொத ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரை, ஹம்பாந்தோட்டை வண்டுருப்ப தேரபுத்தாபய இராசமாதா விகாரை, கெட்ராம ராஜமஹா விகாரை ஆகியவை இந்த பட்டியலில் உள்ளன.
இந்த ஆண்டு வெசாக் விழாவை மாத்தளையை மையமாகக் கொண்டு மே 21 முதல் மே 27 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாத்தளை க்ஷேத்ராராம ரஜமஹா விகாரையை வழிபாட்டுத் தலமாக அபிவிருத்தி செய்வதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.