நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து மின்னல் தாக்கி புல்தரையில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடுகளும் ஒரு பசுவும் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே வீதியில் கலமுதுன தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த 4 மாடுகள் கடந்த 13 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கிய இடத்தில் பெரிய பள்ளம் இருந்ததாகவும், இறந்த விலங்குகளின் மதிப்பு 8 இலட்சம் ரூபா என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.