பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மக்கொன பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரத்தை தொட்டு மின்சாரம் தாக்கியதில் சிறுமி பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மக்கொன, முங்கென பிரதேசத்தை சேர்ந்த 3 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.