வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (13) யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வாழைத்தோட்ட பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரியின்றி கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த பத்தரமுல்லைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 800 மான்செஸ்டர் ரக சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.