கடந்த 8 ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு உதவிய நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
‘ஆதரே’ என்ற புனைப்பெயர் கொண்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூவமோதர சந்தியில் வைத்து நேற்று (13) விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 1,150 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.