Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெறுமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று இன்று (14) செய்தி வெளியிட்டிருந்தது.

ரிதிகம, பனகமுவைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் நபருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியின் ஒரு பகுதி கோழிகளுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த அரிசியை உட்கொண்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் பொது சுகாதார அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்ததை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles