Thursday, April 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவினாத்தாள் சர்ச்சை: கல்வி அமைச்சர் வெளியிட்ட கருத்து

வினாத்தாள் சர்ச்சை: கல்வி அமைச்சர் வெளியிட்ட கருத்து

க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த வினாத்தாள்கள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

அத்துடன், விஞ்ஞான வினாத்தாளை அமைத்தவர்கள் கூடி இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதேவேளை, ஆங்கில வினாத்தாளுக்கான மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அங்கு ஆங்கில பாடம் தொடர்பான ஆசிரியர் நியமனம் மற்றும் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் நியமனத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles