Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞன் கொலை: காதலி கைது

இளைஞன் கொலை: காதலி கைது

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பை, பனிரெண்டாவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி மீட்கப்பட்டது.

காணாமல் போன இளைஞன் காதல் தொடர்பு முரண்பாட்டில் கொலை செய்யப்பட்டதாகத் முதல் கட்டமாக சந்தேகிக்கப்பட்டுள்ளதுடன்,இவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று (06) குளியாப்பிட்டிய நீதிமன்றில் ஆஜராகிய பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் .

வெலிமடை மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் இந்தக் கொலைக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் .

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாபிட்டிய, இலுகேன பிரதேசத்தில் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இளைஞனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles