Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு80 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் மூவர் கைது

80 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் மூவர் கைது

தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில, சீனுகல, ஹம்பேகமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனமல்வில பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 29 வயதுடைய கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் போது இவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கும் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பேகமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles