Friday, March 14, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபோதையில் வெயிலில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழப்பு

மதுபோதையில் வெயிலில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மதுபோதையில் வெயிலில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் என்ற 45 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் மதியம் ஒரு மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வீட்டின் பின்புறம் வெயிலில் தன்னிலை மறந்து மதுபோதையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சட்ட மருத்துவ அதிகாரி தனது பரிசோதனையின் பின்னர் குறித்த இறப்பு வெயில் வெப்பத்தினால் ஏற்பட்டது என அறிக்கையிட்டுள்ளார்.

சடலம் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles