நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் நோர்வே சென்று தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அங்கு வசித்து வந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இச் சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.