வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.