Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உலகம்80க்கும் மேற்பட்ட எயார் இந்தியா எஸ்பிரஸ் விமானங்கள் ரத்து

80க்கும் மேற்பட்ட எயார் இந்தியா எஸ்பிரஸ் விமானங்கள் ரத்து

எயார் இந்தியா எக்ஸ்பிரஸின் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இன்று சுகயீன விடுமுறை அறிவித்துள்ளதாகவும், இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 300 ஊழியர்கள் கடைசி நேரத்தில் சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளதுடன், அவர்கள் தமது கைப்பேசிகளை துண்டித்து இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், விமானம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுப் பணம் திரும்ப வழங்கப்படும் அல்லது வேறு திகதிக்கு மாற்றப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles