டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய சந்தேகநபரின் அவிசாவளை, யலகம, நாபாவெல பகுதியில் உள்ள வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கைக்குண்டு வீட்டினுள் புதைக்கப்பட்டிருந்த நிலையிலும், மோட்டார் சைக்கிள் வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
மேலும் சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.