Friday, March 14, 2025
27.5 C
Colombo
வடக்குபருத்தித்துறை பேருந்து காப்பாளர் செய்த உன்னத செயல்

பருத்தித்துறை பேருந்து காப்பாளர் செய்த உன்னத செயல்

வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் டீ.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு, 120,840 ரூபா மற்றும் 300 யூரோ பணத்தினை நேற்று சாலையில் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பேருந்து காப்பாளரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

அத்துடன், இவர் 2021ம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட 2 இலட்சத்து ஐம்பத்தோராயிரம் ரூபா பணம் மற்றும் எழுபதாயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles