வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் ஹந்தபனகல சோமியல் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்ற பாதசாரி ஒருவரின் மீது வாகனம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதுடன், குறித்த வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர், பல வாகனங்கள் வீதியில் கிடந்த இறந்த சடலத்தின் மேல் பயணித்துள்ளதாகவும், அதனால் சடலம் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அலுகல்கே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
எனினும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.