2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 1,605 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வைபவம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நேற்று (06) நடைபெற்றது.
100க்கும் மேற்பட்டோருக்கு அடையாளமாக நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அனைத்து நிரந்தர நியமனம் பெற்றவர்களின் கடிதங்களும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.