Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமான நிலைய சர்ச்சை: இளைஞனிடம் வாக்குமூலம்

விமான நிலைய சர்ச்சை: இளைஞனிடம் வாக்குமூலம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸ் அறைக்கு இன்று (06) காலை அழைக்கப்பட்டிருந்தார்.

சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற குறித்த இளைஞன் இன்று காலை 10 மணி அளவில் விமான நிலைய பொலிஸ் அறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அவர் விமான நிலைய பொலிஸூக்கு வந்தபோது, வேறு சில வழக்கறிஞர்களும் அங்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களை கட்டுநாயக்க பொலிஸார் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles