Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவுக்கு சென்ற சவப்பெட்டிகளை மடக்கி பிடித்த பொலிஸார்

முல்லைத்தீவுக்கு சென்ற சவப்பெட்டிகளை மடக்கி பிடித்த பொலிஸார்

ஆபத்தான முறையில் சவப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியை பண்டாரகம பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

பண்டாரகம நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது பாணந்துறையில் இருந்து வந்த லொறியை பண்டாரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்ட போது அங்கு 50 சவப்பெட்டிகள், ஒன்றின் மேல் ஒன்றாக ஏற்றப்பட்டிருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

பண்டாரகம நகரின் வீதி சமிக்ஞைகளை தொடும் அளவிற்கு குறித்த சவப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த லொறியின் சாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த சவப்பெட்டிகளை பாணந்துறை, அலுபுமுல்ல பகுதியில் இருந்து முல்லைத்தீவுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

சவப்பெட்டிகளை ஆபத்தான முறையில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles