முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய தீர்மானித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முட்டை தட்டுப்பாடு இருப்பதாக காட்டிக்கொண்டு முட்டை ஏகபோகமாக இயங்கி வருவதால், மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்து குறைந்த விலையில் தருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.