கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் பதிவாகியுள்ளது.
பரீட்சை மத்திய நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக குறித்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவன் தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரதென்ன வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.