புத்தளம், கருவலகஸ்வெவ, எகொடபிட்டிய பிரதேசத்தில் 3 மாத வயதுடைய யானை குட்டி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெரிய யானையொன்று மிதித்து குட்டி யானை உயிரிழந்திருக்கலாம் என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த யானை குட்டியை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.