Tuesday, June 23, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமண்டைதீவிற்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம்

மண்டைதீவிற்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் ( Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள்இ சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, அவர்கள் மண்டைத்தீவு பகுதியில் நேற்று (01) கள விஜயத்தில் ஈடுபட்டனர்.

கண்டல் தாவரங்களினால் இயற்கையாக அமைந்த நன்மைகள் பற்றியும், மண்டைதீவில் கண்டல் தாவரங்களின் பரம்பல் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles