அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு 9,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ட்ரம்புக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், டொனால்ட் ட்ரம்புக்கும், ஆபாச படங்களில் நடித்த நடிகைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அதை ரகசியமாக வைக்க டிரம்ப் அந்த நடிகைக்கு பணம் கொடுத்ததாகவும், டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் குழுவை ட்ரம்ப் பகிரங்கமாக விமர்சித்தார்.
அதற்காகவே டொனால்ட் ட்ரம்புக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.