நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாளை (02) ஜோர்ஜியா பயணிக்கவுள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாடு நாளை (02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் நடைபெறவுள்ளது.
இந்த வருட மாநாடு ஏனைய உறுப்பு நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்துகின்றார்.