வாரியபொல பாதெனிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
80 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பளை பகுதியில் இருந்து புத்தளம் தப்போவ பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, வீதியின் எதிர்புறத்தில் உள்ள தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு உறங்கியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேனில் 2 வார குழந்தை உட்பட 6 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் நிகவெரட்டிய மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.