சர்வதேச தொழிலாளர் தினமான நாளை (01) மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் மதுவரி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை மே தின பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் அனுமதிப்பத்திரத்துடன் கூடிய மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.