சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (1) இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
நாளை காலை கொட்டகலை மைதானத்தில் நடைபெறும் தோட்டத் தொழிலாளர்களின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கும் ஜனாதிபதி, பின்னர் பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் மே தினப் பேரணியில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.