ஒன்லைன் புகையிரத இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் கூறுகிறது.
உதவி போக்குவரத்து அத்தியட்சகர் ஒருவரின் அதிகாரத்தின் கீழ் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட மறுப்பதாக, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சுமேத சோமரத்ன, புகையிரத திணைக்களத்தில் பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெறும் இடமாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.