ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்கள் மற்றும் பாதாள உலகத்திற்கு எதிரான விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற முதலாவது பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியினரின் கலைப்பு அணிவகுப்பு நடைபெற்றது.
பொது பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் இன்று (25) இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
பயிற்சியில் ஈடுபட்ட 96 சிறப்பு மோட்டார் சைக்கிள் சாரதிகள், 48 மோட்டார் சைக்கிள்களுடன் இங்கு கலைந்து சென்றனர்.
கலைந்து சென்ற அனைத்து மோட்டார் சைக்கிள் சபாரதிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், அவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் அடையாளம் காணப்பட்ட கடத்தல்காரர்களை கண்டுபிடித்து அவர்களின் நடவடிக்கைகளை ஒடுக்குவதே இதன் நோக்கமாகும்.