தியத்தலாவை – ஃபொக்ஸ் ஹில் (Fox Hill) வாகன விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
இதன்போது கடும் காயங்களுக்குள்ளான இருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தியத்தலாவ, ஃபொக்ஸ் ஹில் கார் பந்தய விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.