Tuesday, April 29, 2025
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் மரணத்தில் சந்தேகம்

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் மரணத்தில் சந்தேகம்

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டாரவின் மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால் பிரேத பரிசோதனை மட்டும் நடத்தினால் போதாது என அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, சடலத்தை பிரேத பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணம் குறித்து உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

ரயில்வே பொது மேலாளர் தங்கியிருந்த அறை முழுவதும் ரத்தக்கறைகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்த உதவி பொலிஸ் பரிசோதகர், சடலம் படுக்கையில் இல்லாமல் தரையில் இருந்து மீட்கப்பட்டது என்றார்.

இதன்படி, பொது முகாமையாளரின் மரணம் ஏதேனும் நோய் காரணமாக ஏற்பட்ட இயற்கை மரணமா அல்லது கொலையா என்பதை பொலிசார் கண்டறியவுள்ளதாக உதவி பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவற்றினை கருத்திற்கொண்ட அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய, சடலத்தை பிரேத பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணம் குறித்து உடனடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உயிரிழந்த அனராதபுரம் தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள புகையிரத சுற்றுலா இல்லத்திற்குச் சென்றுஇ அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பரிசோதித்ததன் பின்னர் அநுராதபுரம் பிரதான நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles