Sunday, June 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் தலைதூக்கும் மலேரியா

மீண்டும் தலைதூக்கும் மலேரியா

2024 ஆம் ஆண்டு இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியவர்களின் மத்தியிலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக சமூக மருத்துவ நிபுணர் புபுது சூளசிறி குறிப்பிட்டுள்ளார்.

அந்த நோயாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதி காக்கும் கடமைகளுக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்யச் சென்றவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles