Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மின்னேரிய பிரதேசத்தில் நேற்று (23) நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய வெவ வீதியில் உள்ள மின்சார சபை அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்னேரிய வௌ வீதி பகுதியில் வசித்து வந்த 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் கொலையை செய்தவருக்கும் இடையில் சிறிது காலமாக தகராறு இருந்து வந்த நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலையுடன் தொடர்புடைய நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் நேற்று இரவு மின்னேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின்னேரியா, ஹேன் யாய பிரதேசத்தில் வசிக்கும் 26-30 வயதுக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (24) ஹிங்குரன்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மின்னேரிய பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles