உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.
ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என அவர் தெரிவித்தார்.
இன்று (24) நடைபெற்ற உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட திறப்பு விழா நிகழ்வின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உலகளாவிய தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் .