ஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
ஈரானின் 529 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.