Monday, March 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபண மோசடி செய்த இளைஞன் கைது

பண மோசடி செய்த இளைஞன் கைது

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தலங்காவ கொடெல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பன்னல பிரதேசத்தில் இந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வருகின்ற நிலையில், கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடமும் ஆண் ஒருவரிடமும் 2 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக படல்கம நகருக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது வீட்டில் இருந்து சுமார் 50 கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles