Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய  அனுமதி

இந்தியாவில் 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய  அனுமதி

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கருவுற்ற 14 வயது சிறுமியின் மன மற்றும் உடல் நலனை பாதுகாக்கும் நோக்கில் கருக்கலைப்பு செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருவுக்கு சுமார் 30 வாரங்கள் ஆகிய பின்னரே தாம் கர்ப்பமாக இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருமணமான பெண்களுக்கும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள், ஊனமுற்றோர், சிறுவர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் கருக்கலைப்புச் சட்டத்தின் கருக்கலைப்பு வரம்பு 24 வாரங்கள் என அறிவித்துள்ளதால்இ அனுமதி அரிதாகவே வழங்கப்படுகிறது.

இந்திய தலைமை நீதிபதி டி. சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே. பி. பார்திவாலா அடங்கிய பெஞ்ச்இ ‘மைனர் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கர்ப்பம் தரிப்பது அவளது உடல் மற்றும் மன நலனை பாதிக்கலாம்’ என்ற மருத்துவ குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles